நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று வீட்டுக்கு வீடு மரம் நடும் நிகழ்வு - தொகுப்பு

எம்.எம்.ஜபீர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் வழிகாட்டலில் வீட்டுக்கு வீடு மரம் எனும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்றது.

கல்முனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான றகுமத் மன்சூரின் ஏற்பாட்டில் மரம் நடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இம்மரம் நடுகை நிகழ்வில் கட்சியின் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு மரம் நடுகையை ஆரம்பித்து வைத்தனர். மரம் நடுகை வேலைத்திட்டம் இன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.




பழுலுல்லாஹ் பர்ஹான்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், அமைச்சருமான றஊப் ஹகீமின் விழிகாட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்தின் ஆரம்ப வைபவம் 01-08-2016 இன்று திங்கட்கிழமை புதிய காத்தான்குடி மஃறூப் வீதியில் இடம்பெற்றது.

'ஆலமரம் ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம் வாழ வேண்டும் அதை வாழ்விற்க புறப்படுவோம்' எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்திற்கான முதலாவது பலன்தரக்கூடிய மரத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷப்லி பாறூக் நட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி பிரதேச கட்சி முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி மத்திய குழு பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் அணி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த வேலைத் திட்டம் பலன்தரக்கூடிய மர வகைகளை இளைஞர் காங்கிரஸ் அணியினரைக் கொண்டு ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள வீடுகளில் நட்டி பராமரிப்பதற்கான ஏற்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ளதோடு இம் முயற்சியினுடாக இளைஞர்களுக்கும் இப் பிரதேச மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதுடன் மேலும் பயனுடைய இலக்குகளை அடைவதற்கு இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுலைமான் நாசிறுன் -
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு மத்திய குழு ஏற்பாட்டில் "வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டம் " ஆரம்ப விழா 2016.08.01ம் திகதி மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய வீதியில் மத்திய குழுவின் தலைவர், முன்னாள் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கெளரவ. எம்.எச்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கெளரவ.H.M.M.ஹரீஸ் (விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்) கெளரவ. முழக்கம் மஜீத்(முன்னாள் பிரதி முதல்வர் - கல்முனை மாநகர சபை) கெளரவ.வசீர் (முன்னாள் பிரதி முதல்வர்) கெளரவ. உமர் அலி (கல்முனை மாநகர சபை உறுப்பினர்) கெளரவ. முஸ்தபா (கல்முனை மாநகர சபை உறுப்பினர்) கெளரவ. தெளபீக்(கல்முனை மாநகர சபை உறுப்பினர்) கெளரவ. அமீர் (கல்முனை மாநகர சபை உறுப்பினர்) மற்றும் பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.





எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டளின்கீழ் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டதினை முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா பிரதேசத்திலிருந்து தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் கல்குடா இணைப்பாளர் ஏ,எல்,பாருக்(JP) அவர்களின் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் கல்குடா அமைப்பாளர் ஏ,எல்,எம்,லியாப்தீன்(JP) அவர்களின் பங்கு பற்றலுடன் வாழைச்சேனை அல்.இக்பால் சனசமூக நிலையத்திலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தொடர்ந்து மரம் நடுகை பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, மாஞ்சோலை, மீராவோடை பகுதிகளில் சிறப்பான முறையில் மரம் நடுகை இடம் பெற்றது.




ஏ.எல்.டீன்பைரூஸ்-
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் வீட்டுக்கு வீடு மரம் நடும் வேளைத்திட்டம் கட்சியின் காத்தான்குடி பிரதான காரியாலயத்தில் இன்று (01.08.2016 திங்கள்) காலை 90.30 மணிக்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும்இ நீர் வழங்கல் நகர திட்டமிடல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.என்.எம்.முபீன் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி ஜம்இய்யத்தல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.கையூம்(ஷர்கீ) அவர்களும், உலமாக்களான ஜ.எம்.இப்றாஹீம்எம்.செய்யது புஹாரி ,முகம்மது பைரூஸ்(பலாஹி) காத்தான்குடி சம்மேளன மூத்த உறுப்பினர் எம்.ஐ.எம்.அப்துல் லெத்தீப், மட்டக்களப்பு மத்தி ஆரம்ப கல்வி பணிப்பாளர் எம்.ஐ.எம்.இப்றாஹீம் உட்பட கட்சியின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள்இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினை தொடர்ந்து வீட்டக்கு வீடு மரம் நடல் என்ற அடிப்படையில் புதிய காத்தான்குடி கடற்கரை வீதி, விடுதி வீதி,அப்றார் வீதீ,கர்பலா வீதி,புதிய காத்தான்குடி 6ம் குறுக்கு வீதி ,காத்தான்குடி 1ம் குறிச்சி சாவியா வீதி,காத்தான்குடி 2 கபுறடி வீதி,சின்ன ஓடாவியார் வீதி,ஏ.எச்.எம்.பௌசி மாவத்தை, பிரதான வீதி எச்.என்.பீ ஒழுங்கை ஆகிய இடங்களிலும் மேற்படி மர நடும் நிகழ்வுகள் யூ.எல்.என்.எம்.முபீன் தலைமையில் நடை பெற்றது.



எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் வீட்டுக்கு வீடு மரம் எனும் செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் ஏற்பாட்டில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்தபோரளி ரீ.எல்.மக்கீன், மாஹிர் பவுண்டேசனின் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், கட்சியின் போரளிகள், மாஹிர் பவுண்டேசனின் உறுப்பினர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சம்மாந்துறை பிரதேசத்தில் மர நடுகை நிகழ்வினை ஆராம்பித்துடன் இளைஞர்களும் சிறப்பாக செயற்பட்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -