மாற்றுக் கட்சிகளின் அரசியல் சித்து விளையாட்டு ஒலுவில் மக்களிடம் எடுபடாது - பிரதி அமைச்சர் ஹரீஸ்

அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-

லுவில் கடலரிப்பு விவகாரத்தில் மாற்றுக் கட்சிகளின் அரசியல் சித்து விளையாட்டுக்கள்ஒலுவில் மக்களிடம் எடுபடாது இவர்களின் அரசியல் நாடகங்களை நம்பி மக்கள் ஏமாறவும்தயாரில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறைபிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்வதற்கு ஏதுவாக கரையோரப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும்துறைமுக அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுடனானகலந்துரையாடல் ஒலுவில் துறைமுக அதிகார சபை சுற்றுலா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை(07) இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடல் தொடர்பாக பிரதி அமைச்சர் ஹரீஸ் கருத்துத் தெரிவிக்கையிலேயேமேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

துறைமுக அதிகார சபையினால் விஞ்ஞான ரீதியான ஒரு செயற்திட்ட அறிக்கைக்கு அமைவாககடலரிப்பை தடுப்பதற்கான செயற்பாட்டை மேற்கொள்ள முடியாது. அவ்வாறானசெயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான பாரிய அளவிலான நிதி அவர்களிடம்இல்லை.

எனவே அவர்கள் தற்காலிக தீர்வாக கற்பாறைகளைப் போடுகின்றனர். இது மற்றையபிரதேசங்களை பாதிக்கும் என கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள்தெரிவிக்கின்றனர். எனவே இது நிரந்தரத் தீர்வாக அமையாது. எனவே விஞ்ஞான ரீதியான ஒருசெயற்திட்ட அறிக்கைக்கு அமைவாக கடலரிப்பை தடுக்க வேண்டும் என்று அவர்கள்தெரிவிக்கின்றனர். 

மாறவில பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்பட்ட பிரதேசங்களில் காணிகளை மீட்டெடுக்கும்நடவடிக்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதுபோன்று கடலை நிரப்பி காணிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையினை இங்கும்செயற்படுத்த முடியும். உண்மையில் கடலரிப்பை தடுப்பது என்பது பாரிய திட்டமாகும்.

எனவே இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதன் மூலமே முடியும்.கரையோர பாதுகாப்பு அதிகார சபை ஜனாதிபதியின் கீழ்தான் காணப்படுகின்றது. இது தொடர்பாகஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இச்சந்திப்பின் பின்னர் இதுதொடர்பில் கரையோர பாதுகாப்பு திணைக்கத்தின் பணிப்பாளரின் அறிக்கையினையும், பிரதேசசெயலாளரிடம் இது சம்பந்தமாக உள்ள அறிக்கைகளையும் உள்ளடக்கிய அமைச்சரவைப்பத்திரத்தையும் அமைச்சர் றவூப் ஹக்கீம் சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரத்துடன்கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

துறைமுக அதிகார சபையின் தலைவரை அல்லது அதற்குரிய அமைச்சரை சந்தித்துவிட்டுஊடகங்களில் செய்திகளை போடுவதில் விஷயமில்லை. உயிரோட்டமாக இதய சுத்தியுடன்செய்வதானால் ஜனாதிபதி மட்டத்திற்கு கொண்டு சென்றால்தான் இப்பிரச்சினைக்கான நிரந்தரதீர்வைக் காணலாம். துறைமுக அதிகார சபையினாலோ மீன்பிடி அமைச்சினாலோ மேலேகுறிப்பிட்ட அடிப்படையில் இக்கடலரிப்பிக்கான நிரந்தரத் தீர்வை வழங்க முடியாது.

உண்மையில் கடலரிப்பை தடுப்பது என்பது பாரிய திட்டமாகும். இதனை துறைமுக அதிகாரசபை இன்றுள்ள நிலமையில் இதற்கான நிதியினை தனியாக செலவு செய்யாது. எனவேஒலுவில் பிரதேசத்தின் துன்பகரமான இவ்விடயத்தில் அரசியல் செய்ய விளைய வேண்டாம்.மாற்றுக் கட்சிகளின் அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஒலுவில் மக்களிடம் எடுபடாதுஇவர்களின் அரசியல் நாடகங்களை நம்பி மக்கள் ஏமாறவும் தயாரில்லை எனவும் பிரதிஅமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -