அஸ்மி-
அண்மையில் யாழ்ப்பாணம் வடலியடைப்பு பிள்ளையார் கோவில் பகுதியில் சிசு ஒன்றை பெட்டியில் வைத்து வீதியில் வீசி விட்டு சென்ற சம்பவம் தொடர்பில் தாய் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் -
யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சிசு தனக்குப் பிறக்கவில்லையென்று கணவர் அடிக்கடி வீட்டில் சண்டையிட்டமையால், சிசுவை வீதியில் விட்டுச் சென்றதாக அத்தாய் போலீசாரிடம் கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட சிசு தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் பராமரிக்கப்படும் அதே வேளை குறித்த தாயும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -