புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கலாநிதி அப்துல்லாஹ் பின் அல் முஹ்ஸின் அல் துர்க்கி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன் போது உலக முஸ்லிம் லீக்கின் பிராந்திய காரியாலயம் ஒன்றினை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் இருதரப்புப் பேச்சுக்களும் நடைபெற்றன.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்த சந்திப்பில் “மட்டக்களப்பு கெம்பஸ்” நிறைவேற்றுப் பணிப்hளர் பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது,
உலக முஸ்லிம் லீக்கின் பிராந்திய காரியாலயம் ஒன்றினை இலங்கையில் நிறுவுவதன் ஊடாக நம்நாட்டிலும் பல சேவைகளை முன்னெடுக்க வேண்டும். அதன் தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிராந்திய காரியாலயம் நிறுவுவதற்கு தனது ஆதரவினையும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் இலங்கையில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை வரவேற்ற உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் அப்துல்லாஹ் பின் அல் முஹ்ஸின் அல் துர்க்கி, முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தனது பூரண ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனது செயற்பாடுகள் தொடர்பில் புகழ்ந்து பேசிய முஸ்லிம் லீக் செயலாளர், அதன் எதிர்கால திட்டங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.