மடவளை மதீனா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதான அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் 40 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் மடவளை மதீனா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது பாடசாலை அதிபர் உள்ளிட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் பிரதி அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று பிரதி அமைச்சர் கொடுத்த வாக்குறுதிற்கமைவாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில்; மேற்கொள்ளப்படவுள்ள மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முஸ்லிம் காங்கிரஸின் மடவளை கிளை உறுப்பினர்களுக்கும் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினருக்குமிடையில் நேற்று (10) புதன்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மடவளை மதீனா தேசிய பாடசாலையின் மைதான அபிவிருத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தந்த பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு பாடசாலை நிர்வாகம், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் மடவளை கிளை உறுப்பினர்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.