பைஷல் இஸ்மாயில்-
உணவு, விவசாய ஸ்தாபணத்தினால் செயற்படுத்தப்படுகிற (EU-SDDP) திட்டத்தின் கீழ் கஞ்சிகுடிச்சாறு குள புணரமைப்பு வேலைத்திட்டத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் மற்றும் விவசாய நீர்ப்பாசண அமைச்சர் கிறிஸ்ணப்பிள்ளை துறைறாசசிங்கம் ஆகியோரினால் இன்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கஞ்சிகுடிச்சாறு, கோப்பைகரச்சி, வகிரயந்தலாவ, சாவாறு, போட்டாக்குளம், கல்லடி முன்மாறி, மலையடிக்குளம், சின்னச்சாவாறு போன்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற சுமார் 5100 ஏக்கர் காணிகளில் 1700 ஏக்கர் காணிகளுக்கே இந்த கஞ்சிகுடிச்சாறு குளத்தின் முலம் நீர் வழங்க போதுமாக காணப்பட்டு வருகின்றது.
1979 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த குளம் கடந்த 30 ஆண்டுகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்ததால் இக்குளத்தை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. யுத்தம் முடிவடைந்த பின்னர் குளத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சுகாதார அமைச்சர், விவசாய அமைச்சரிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைவாக சுமார் 61769770.65 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.