அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் இரு சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக மலேசியா பயணமானார். அதில் ஒன்று பொது நலவாய நாடுகளின் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான வருடாந்த மாநாடாகும். அம்மாநாடு, இம்மாதம் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளதோடு, அடுத்த மாநாடு 6வது பொது நலவாய நாடுகளின் அரசாங்க நிர்வாக அமைச்சர்களின் மாநாடாகும். இம்மாநாடு எதிர்வரும் 17 ஆந்திகதி நடைபெறவுள்ளதோடு, இவ்விரண்டு மாநாடுகளும் மலேசியாவின் புத்ரஜாயா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
பொது நலவாய நாடுகளின் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான வருடாந்த மாநாட்டின் தொனிப்பொருளாக அமைவது, "அரச சேவைக்காக அத்தியாவசியமானவற்றை மேம்படுத்தல்" ஆகும். அதே போன்று பொது நலவாய நாடுகளின் அரசாங்க நிர்வாக அமைச்சர்களது 6வது மாநாட்டின் தொனிப்பொருள் "நிலையான அபிவிருத்திக்காக அரச நிர்வாகம்" ஆகும். இவ்விரு மாநாடுகளுக்கும் பொது நலவாயத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இவ்விரு மாநாடுகளிலும் கலந்து கொள்ள அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சருடன், அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்களும் மலேசியா பயணமானார்.
கஹட்டோவிட்ட ரிஹ்மி,
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு.