அல்லாஹ் என்று சொன்னதற்காக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட தம்பதிகள்



அமெரிக்க விமானமான டெல்டா விமானத்தில் இருந்து கடந்த ஜூலை 26ந்தேதி ஃபைசல்-நாஸியா தம்பதியினர் தக்க காரணமின்றி வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கக்குடியுரிமை பெற்ற இத்தம்பதி தங்கள் பத்தாவது திருமண நாளை பாரீஸில் கொண்டாடிவிட்டு ஒஹியோவின் சின்சினாட்டியில் தம் வீட்டிறகுச் செல்ல டெல்டா விமானத்தில் பயணப்பட்டனர்.

விமானம் கிளம்ப சிறிது நேரம் இருக்கும் போது விமான ஊழியர் ஒருவர் ஃபைசல்-நாஸியாவை வெளியேறுமாறும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அதிர்ந்த தம்பதியினர் காரணத்தைக் கேட்க விமானப்பணிப்பெண் ஒருவர் அவர்களது இருப்பால் சங்கடமாக உணர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்தம்பதியினர் அல்லாஹ் என்று கூறியதால் விமான ஓட்டி அவர்கள் வெளியறாதவரை விமானத்தைச் செலுத்துவதில்லை என்றும் குடைச்சல் கொடுத்தார். இதனால் வேறை வழியின்றி அத்தம்பதி விமானத்தில் இருந்து வெளியேறினர்.

அவர்களிடம் விசாரித்த அதிகாரி சந்தேகப்படும்படியான எந்தத் தகவலோ செயலோ அத்தம்பதியினரிடம் தென்படவில்லை எனத் தன் அறிக்கையில் தெரிவித்தார். அத்தம்பதியினருக்குத் தங்குவதற்கு ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டு வேறு விமானத்தில் பின்பு பயணம் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து ஃபைசல்-நாஸியா இருவரும் ” விமானப்பணியாளர்களுக்குப் பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிக்கப்பட வேண்டும். அமெரிக்கப் போக்குவரத்துத்துறையிடம் டெல்டா விமானம் உள்பட அமெரிக்க விமான சேவைகளின் விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர்களின் சட்டவிதிமீறல்களின் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது்” என்றன்ர்.

இது குறித்து டெல்டா விமான அதிகாரிகள் கூறுகையில்: டெல்டா விமானத்திற்கு எந்த இன, மத பாகுபாடும் கிடையாது. அனைத்து பயணிகளின் பாதுகாப்பும் எங்களுக்கு அவசியம. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வோம் என்று கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -