பிரத்தியேக வகுப்புக்கு செல்லும் மாணவிகளுக்கான பஸ் சேவை- ஷிப்லி பாறுக்

M.T. ஹைதர் அலி-

காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற பெண் மாணவிகளுக்கு பிரத்தியேகமாக (விசேடமாக) ஒரு பேரூந்து சேவை ஒன்றினை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆலோசித்து வருகின்றார்.

அந்தவகையில் பிற்பகல் வேளைகளில் அதாவது பி.ப 3.00 மணியிலிருந்து 4.00 மணி வரையிலுள்ள அந்த நேரத்தில் காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பிற்கு செல்வதற்கும் அதே போன்று மாலை 5.00 மணியிலிருந்து 6.00 மணிவரைகுட்பட்ட நேரத்திற்குள் மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடி நோக்கி வருவதற்கும் பிரத்தியோகமாக பெண் மாணவர்களுக்கு மாத்திரம் அதிலே ஆண் மாணவர்களோ அல்லது ஏனைய ஆண்களோ பிரயாணம் செய்யமுடியாது அவ்வாறான பிரத்தியோகமான (விசேடமான) சேவை ஒன்றினை முன்னெடுப்பதற்கான முயற்சி ஒன்றினை செய்து வருகின்றார்.

அந்த வகையில் மிகவும் விரைவாக அவ்வாறானதொரு பேரூந்து சேவையினை தொடங்குவதனூடாக காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்புக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஏறிச்செல்வதற்கும் அதேபோன்று குறிப்பிட நேரத்தில் மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடிக்கு மாணவிகள் வருவதற்கு ஒரு பாதுகாப்பான பிரயாணத்தினை மேற்கொள்வதற்கும் நாங்கள் ஆலோசித்து வருகின்றார். இன்ஷால்லாஹ் மிக விரைவாக இந்த பேரூந்து சேவையினை ஆரம்பிப்பதற்கு முடிவெடுத்துள்ளார்.

ஆகவே இது தொடர்பான உங்களது ஆலோசனைகள் ஏதும் இருப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் நேரடியாக தொடர்புகொண்டு அதிலிருக்கும் சாதக பாதகங்களை பகிர்ந்து கொண்டு அம்மாணவர்களின் கல்விக்கு சிறந்த ஒரு வழிகாட்டலினை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -