வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் உரிய விசாரணை நடத்தவில்லை - குற்றச்சாட்டு

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் உரிய விசாரணை நடத்தவில்லை என முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாஜூடின் சடலத்தின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர பொறுப்பு சொல்ல வேண்டுமென சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கடிதமொன்றை அமைச்சு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு விளக்கம் அளித்துள்ளது.

அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரமவின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் இந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி தாஜூடின் மரணம் குறித்து உரிய முறையில் பிரேதப் பரிசோதனை நடத்தவில்லை எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளுக்கு அமைய உடற் பாகங்களை பாதுகாக்க தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வுப் பிரிவிடம், சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சு எழுத்து மூலம் கோரியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -