அரசியல் கைதிகளை விடுதலை செய்வது காலத்தின் கட்டாயம் - ஹிஸ்புல்லாஹ்

ந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி பல வருட காலமாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளை நிபந்தனையின் அடிப்படையிலாவது விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். 

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி நாளை திங்கட்கிழமை கொழும்பு மற்றும் யாழ்ப்பாண பகுதிகளில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இலங்கை அரசு சர்வதேச ரீதியில் பல சவால்களை முகம்கொடுத்து வருகின்ற நிலையில், இப்பிரச்சினை மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தும். 

எந்தவித குற்றச்சாட்டுகளுமின்றி சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உரையாற்றியுள்ளேன். 

கடந்த காலங்களில் பல அரசியல் கைதிகள் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதுபோன்று நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  அரசியல் கைதிகள் பிரச்சினை ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாக பார்க்காது, இதனை பொதுப் பிரச்சினையாகக் கருதவேண்டும். என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -