சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் ஆரம்ப வைபவம் இன்று (11) மு.ப. 10.00 மணிக்கு கொழும்பில் உள்ள பிரதமா் வாசஸ்தலாமான அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த உலக முஸ்லீம் லீக்கின் செயலாளா் நாயகம் கலாநிதி அப்துல்லா, பின் அல்-டேக்கிஸ் தலைமையில் நடைபெற்றது. பிரதான மேடையில் தபால் மற்றும் முஸ்லிம் ்சமய விவகார அமைச்சா் எம்.எச்.ஏ ஹலீம், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தின் தலைவா் முன்னாள் கொழும்பு மேயா் ஹூசைன் முஹம்மத், ஜம்மியத்துல் உலமா தலைவா் அஷ் ஷேக் றிஸ்வி முப்தி ஆகியோறும் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.
11 நாடுகளின் பிரநிதிகள் - சீனா, மியன்மாா், கம்போடியா, சீனா, இந்தியா பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற நாடுகளில் சிறுபாண்மையினராக வாழும் முஸ்லீம்களது பிரநிதிகள் இம் மாநட்டில் கலந்து கொள்கின்றனா். அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போா் கூடத்தில் இன்றும் (11,ஆம் 12) ஆம் தகிதிகளில் முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஆராய்ந்து அந்த நாடுகளுக்கு முன்வைக்க உள்ளன. சகவாழ்வை வழியுறுத்தி ஏனைய இனங்களுடன் ஜக்கியமாகவும் வாழ்வதற்கு என்ற தலைப்பில் கருத்தரங்கில் கலந்துரையாடப்பட உள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பொறும் சமபவங்களும் கலந்துரையாடப்படும். இதில் உள்ளுர் முஸ்லீம் பிரநிதிகளும் கலந்து கொள்கின்றனா்.
கடந்த காலத்தில் இம் அமைப்பின் உப தலைவராக காலம் சென்ற எம்.எச். முஹம்மத் கடமையாற்றி உலக சமதான பரிசை வென்றவா். தற்போழுது இத் தலைமைத்துவம் முன்னாள் மேயா் ஹூசைன் முஹம்மத் பொறுப்பேற்றுள்ளாா்.
இங்கு உரையாற்றிய பிரதமா் - ரணில் விக்கிரமசிங்க -
இலங்கையில் கடந்த கால யுத்த காலத்தின் முஸ்லீம்கள் ஒரு இணைப்பு பாலமாக அன்ணியோன்னியமாக சமாதானமாக ஏனைய சமுகங்களுடன் வாழ்ந்து வந்தனா், இந்த நாட்டில் இனவாதத்திற்கு ஒரு போதும் இடமில்லை. என்னை தலைவராகக் கொண்டுள்ள ஜ.தே.கட்சியில் சகல சமுகங்களையும் பிரநிதித்துவப்படுத்திய அரசுடன் ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாகக் கொண்டு இந்த அரசாங்கம் சிறந்த முறையில் முன்னெடுத்துக் செல்லப்படுகின்றது. இந்த நாட்டில் பொளத்த பெரும்பாண்மை மக்களோடு கிருஸ்த்தவம், ஹிந்து இஸ்லாமிய மக்கள் மிகவும் சகவாழ்வுடன் ஜக்கியமாகவும் சமாதாணமாகவும் வாழ்ந்து வருகின்றனா் என பிரதமா ்ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாா்.