புனர்வாழ்வின் போது, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரச மருத்துவர்களைக் கொண்டு உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘போர் முடிவுக்கு வந்த பின்னர் 11 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வு அளித்திருக்கிறோம். நாம் ஒன்றையும் மறைக்கவில்லை.
எனவே, கூடிய விரைவில் அரச மருத்துவ அதிகாரிகளைக் கொண்டு விசாரணைகளை நடத்தி குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை பெறவதற்காக பரப்பப்படும் பிந்திய பொய்யே இது. முன்னாள் போராளிகளுக்கு, நாம் அவர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம் என்பது நன்கு தெரியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.