தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமகால உலக பிரச்சினைகள் குறித்த பயிற்சிப் பட்டறை

லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் சமகால உலக பிரச்சினைகள் 'Contemporary Global Issues' எனும் பயிற்சிப் பட்டறை கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையானது அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் ஆலிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

சமூக ஆர்வலரான பைஸால் அவர்கள் இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து சிறப்பித்ததுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. 

அத்துடன் இந்நிகழ்வில் அரசியல்துறை விரிவுரையாளர் பாஸில், சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி றமீஸ் மற்றும் விரிவுரையாளர்களான பௌஸர், றிஸ்வான் அத்துடன் பொறியில் பீட விரிவுரையாளர்களான முர்ஷித்,சபத்துல்லாஹ், கலை கலாசார பீட ஏனைய விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள் மற்றும் அரசியல் விஷேட துறை மாணவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்வைத்தனர். 

இந்நிகழ்வானது மாணவர்களின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான அறிவை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.​​​​​​​​​​​​​​​​​​





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -