இலங்கையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெளிவுபடுத்தினார். அரசியல் காரணங்களுக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதாலேயே தாம் இசைக்கச்சேரியில் கலந்துகொள்ளவில்லையென அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் கண்டிப்பாக இலங்கை வரும் வாய்ப்பு உள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டார். நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இன்று கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு நினைவு இசை கச்சேரியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பின்னர் ஐ.நா. மன்றத்தில் இசை கச்சேரி நடத்தும் இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையை இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகின்றார்.