NFGG நிதியில் பாலமுனையில் விதி..!

காத்தான்குடி- பாலமுனை CIG வீட்டுத் திட்ட பிரதேச மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்த வீதியினை தமது சொந்த நிதியிலிருந்து அமைத்துத் தருவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) முன்வந்துள்ளது.

இப்பிரதேச மக்களின் வேண்டுகோளை ஏற்று நேற்று (07.07.2016) காலை இப்பிரதேசத்திற்கு NFGGயின் பிரதிநிதிகள் விஜயம் செய்த போதே இந்த வாக்குறுதியினை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.

பாலமுனைப் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான CIG வீட்டுத்திட்டப் பகுதியில் அமைந்துள்ள வீதியொன்று மணல் வீதியாக மிக் நீண்ட காலமாக காணப்பட்டு வருகிறது. இதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமது போக்குவரத்துத் தொடர்பில் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இதற்கான தீர்வினைப் பெற்றுத் தருமாறு NFGG யிடம் சில வாரங்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மக்களின் நிலைமைகளை நேரில் அவதானிப்பதற்காக நேரில் அப்பிரதேசத்திற்கு சென்றிருந்த NFGG பிரதிநிதிகள் மக்களின் இந்த உடனடித்தேவைகயினைக் கருத்திற் கொண்டு இப்பாதையினை கிறவலிட்டு சீரான பாதையாக அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்ததோடு அதற்கான ஆரம்ப கட்டவேலைகளும தொடக்கிவைக்கப்பட்டன.

இந்த வீதியானது Nகுபுபுயின் சொந்த நிதியிலிருந்து அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த NFGG யின் குழுவில் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் உட்பட மட்டக்களப்பு பிராந்திய தலைமைத்துவ சபை உறுப்பினர்களான MM. அமீரலி ஆசிரியர்இ . AGM பழீல்இ முஹம்மட் றபீக் ஆகியோருடன் பாலமுனைப் பிரதேச செயற்குழு உறுப்பினர்களான MAM சியாட்,MI . அஸ்லம், I.அப்துர் ரஹீம் MIM .சியாம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -