எம்மை அடிமைப்படுத்த நாம் இடமளிக்கலாமா..? - SM சபீஸ்

டகிழக்கு இணைக்கப்படக்கூடாது என்பதை பலவருடங்களாக கூறிவிட்டோம். ஒருசிலர் வடகிழக்கை இணைப்பது சாத்தியமற்ற ஒருசெயற்பாடு அதனால் அஞ்ச தேவையில்லை என அவர்களின் தேவைக்கேற்ப கூறுகிறார்கள். இன்னும் சிலர் இணைத்தால் என்ன என்று கேட்கின்றனர்.

வடகிழக்கு இரவோடு இரவாக ஒரு ஒப்பந்தத்தின் மூலம் எவ்வாறு இணைக்கப்பட்டது?

தமக்கு தேவையான ஆட்சி மாற்றத்தினை எவ்வாறு கொண்டு வருகின்றார்கள்?

எதிர்கட்சி அந்தஸ்த்து எவ்வாறு தமிழர் விடுதலை கூட்டணிக்கு வழங்க்கப்பட்டது?

அவிழ்கமுடியாத கேள்விகளுடன் ஐரோப்பிய நாட்டு தலைவர்களை தீர்மானிக்கக்கூடிய பண பலம் பொருந்திய சக்தி ஒன்று உள்ளது என்பதனை நாம் அறிவோம். ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத்தவிர எதுவுமே சாத்தியமான இக்காலத்தில் நம்மை நாமே பாதுகாக்க வேண்டும். வடகிழக்கு எதற்காக இணைக்கப்படக்கூடாது என்பதனை ஆவணப்படுத்தளிநூடாக தொடர்ச்சியாக எமது மக்களுக்கும் இளைஞர்களுக்கும் தர முயற்சிக்கப்போகிறோம்.

O1 கிழக்கில் 37.12 % விகிதாசாரத்தில் பெரும்பான்மை சமூகமாக வாழும் முஸ்லிம் மக்களை வடகிழக்கு இணைப்பின் மூலம் 23% சதவிகித மக்களாக அடிமைப்படுத்தி “ முஸ்லிம்கள் குழு அல்ல அதுவொரு சமூகம்” என்ற அடையாளத்தை TNA அழிக்க நினைப்பது ஏன்?

02 பெரும்பான்மை சிங்கள மக்களோடு வாழமுடியாது என சுயாட்சி கோரும் TNA கிழக்கில் வாழுகின்ற 68% சத வீதமான மாற்று மத மக்களை அடக்கி ஆழ நினைப்பது எந்த வகையில் நியாயம்?

03 வடக்கில் வாழுகின்ற மாற்றுமதத்தை சேர்ந்த 26 % சதவீதமான மக்களை TNA ஆட்சி செய்கின்றபோது கிழக்கு மாகாணத்தை ஏன் கிழக்கு மக்கள் ஆட்சி செய்யக்கூடாது

மக்கள் சக்திக்கு முன்னாள் பணமும் அதிகாரமும் வெறும் சக்கையே,

நமது சமூகமும் வாழவேண்டும் என்று நினைப்பது இனவாதம் கிடையாது
எமது சமூகம் மட்டும்தான் வாழ வேண்டும் என நினைப்பதுதான் இனவாதமாகும் இதனைத்தான் TNA செய்கின்றது. நமது மக்களின் அடையாளத்தையும் இருப்பையும் உறுதி செய்யும் கிழக்குமாகாணத்தை வடக்கோடு இணைக்கும் எண்ணத்துக்கு இப்போதே சாவு மணி அடிக்க கட்சி பேதங்களுக்கு அப்பால் நாம் ஒன்று சேருவோம்.

நாங்கள் பெரியோர்கள் மீது வைத்துள்ள அன்பைப்போல் நமது இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளோம் வடகிழக்கு இணைப்புக்கு எதிராக உங்களால் எழுதமுடியும், தெளிவற்றவர்களுக்கு தெளிவு படுத்த முடியும், எம்மை மீறி நமது மக்களின் நம்பிக்கையை சிதைக்க முற்படும் போது என்ன செய்யவேண்டும் என்பதனை நாம் ஒன்று சேர்ந்து தீர்மானிப்போம் 
தொடரும் ......

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -