அப்துல்சலாம் யாசீம்-
இலங்கை இரானுவத்தினால் 07 வது தடவையாக நடாத்தப்பட்டு வருகின்ற "நீர்க்காகம்"என்ற விஷேட தாக்குதல் பயிற்சியின் இறுதிநாள் நிகழ்வு இன்று (20) காலை புல்மோட்டை-அரிசி மலைப்பகுதியில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி -பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித்த குணதிலக-இரானுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உட்பட முப்படை உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 04ம் திகதி ஆரம்பமான இந்ந விஷேட தாக்குதல் பயிற்சி கொக்கிளாய் முதல் அரிசிமலலை பிரதேசம் வரை இடம்பெற்றது. இதில் 2500 காலாட் படையினரும் 638 கடற்படையினரும் 506 விமானப்படையினரும் மற்றும் பங்களாதேஷ்-சீனா-இந்தியா-சூடான்-மாலைதீவு- நேபாளம்-பாகிஸ்தான்-அமேரிக்கா போன்ற நாடுகளைச்சேர்ந்த 49 வௌிநாட்டு படை வீரர்களும் கலந்து கொண்டனர்.