100 மில்லியன் செலவில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி - ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்

பழுலுல்லாஹ் பர்ஹான்-
ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சுமார் 100 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் அபிவிருத்திப் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளரும், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 25 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு பார்வையிட்டார்.

அங்கு விஜயம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் நிர்மாண வேலைகள் தொடர்பிலும் அதன் ஏனைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிரிடம் கேட்டு அதற்கான ஆலோசனைகளை வழங்கி வைத்தார்.

குறித்த தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிர்மாணிப்பதற்கும், அதற்கான சகல வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனம் சுமார் 100 மில்லியன் (10கோடி) ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -