மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள ஆனந்தா ஒழுங்கையில் வைத்து நேற்று இரவு 11 மணியளவில் வாகன சாரதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். சோமசிறி விஜித் ஜெயந்த் வயது [34] என்ற 1 பிள்ளையின் தந்தையே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் 1 மணி நேரத்தில் மட்டகளப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.