க.கிஷாந்தன்-
மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களில் தமிழ் கல்வி அமைச்சு இருந்த போது சுமார் 400 அல்லது 500 லட்சம் ரூபா தான் தமிழ் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்கள் எவ்வித பாகுபாடுமின்றி மத்திய மாகாண தமிழ் கல்விக்கு பாரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நுவரெலியா தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய மாத்திரம் 1200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளார். இது எமக்கு கிடைத்த பாரிய நிதியாகும் எனவே பாடசாலைக்கு தேவையான சகல வளங்களையும் நாங்கள் பெற்றுக்கொடுப்போம்.
அதற்கு இணையாக நீங்கள் பெறு பேறுகளை அதிகாரித்து காட்ட வேண்டும் ஒரு காலத்தில் 10 லட்சம் பேர் தோட்டத்தில் வேலை செய்தார்கள் ஆனால் இன்று அது ஒன்றரை லட்சமாக மாறியுள்ளது நாளை 50000 ஆயிரமாக மாரும். எனவே நாம் என்னாலும் தோட்ட தொழிலை மாத்திரம் நம்பியிருக்க முடியாது எமது பிள்ளகைள் அரச உத்தியோகங்களுக்கு செல்ல வேண்டும். அதற்கு சிறந்த கல்வி அறிவு அவசியம் என மத்திய மாகாண விவசாய மீன்பிடி தோட்ட உட்கட்டமைப்பு இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட செனன் தமிழ் வித்தியாலத்தில் சுமார் 40 லட்சம் நிர்மானிக்கப்படவுள்ள பாடசாலை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு 19.09.2016 அன்று அமைச்சர் ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எமது சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் கல்வியில் தான் அதனை செய்ய முடியும். எனவே அன்று சௌமிய மூரத்தி தொண்டமான் அவர்கள் தீர்க்க தரிசனத்ததுடன் தோட்டங்கள் தோறும் பாடசாலைகளை உருவாக்கினார். அதனால் நாம் இன்று சுமார் 50.000 வரை அரச உத்தியோகங்களை பெற்றுக்கொள்ள வாய்பேற்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்ந்து கல்வியில் நாம் சாதனைகளை படைக்க வேண்டும் அப்போது தான் தோட்ட மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். இதனை உணர்ந்து அனைவரும் அர்ப்பணிப்புடன் செயப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் அவர்களும் உறுப்பினர்களும் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
பாடசாலையின் அதிபர் சண்முகநாதன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பிலிப்குமார், கணபதி கணகராஜ், கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு உதவி செயலாளர் அ.சத்தியேந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.