அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் என்பவற்றை இலக்கு வைத்து அல்கெய்தா அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் 15 வருட நிறைவு இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்த 2001 செப்டம்பர் 11 ஆம் திகதி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. உலக அரசியல் போக்கை மாற்றிய ஒரு நாளாக அந்நாள் நினைவு கூறப்படுகின்றது.
அன்றைய தினத்தில் நான்கு பயணிகள் விமானங்கள் கொண்டு அமெரிக்காவின் முக்கிய பல இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல்களுக்கு உசாமா பின் லேடன் தலைமையிலான அல்கெய்தா அமைப்பு உரிமை கோரியதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.