அக்கரைப்பற்று அஹ்லுஸ் சுன்னா ஜூம்மா பள்ளிவாயலினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வட்டி ஒழிப்பு” எனும் தொனிப்பொருளில் மாபெரும் மாநாடு ஒன்றை நடாத்தவுள்ளதாக அதன் தலைவர் யு.எல்.எம்.இஹ்தார் இன்று (14) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த மாநாடு வெள்ளிக்கிழமை (16) மாலை 4.00 மணி தொடர்க்கம் இரவு 10.00 மணிவரை அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தில் இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.
மக்களிடையே வட்டியை ஒழிப்போம், அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவோம். நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் எதிராக நாம் செயற்பட்டவர்களாக ஆளாகி விடுவோம் என்ற கருப்பொருளைக் கொண்டு எம்.ஐ.அன்ஸார் (தப்லீஹி), அப்துல் ஹமீட் (சரயி), அமீருல் அன்சார் (மக்கி), அப்துல் கணி (ஹாமி) ஆகிய பிரசித்தி பெற்ற மௌலவிகளினால் சிறப்பு சொற்பொழிவுகள் இந்த மாநாட்டில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெண்களுக்கு விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாநாட்டின் இறுதியில் வட்டிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து யுத்தத்தை செய்வோம் என்ற பிரகடனமும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.