18வது கொடகே தேசிய சாகித்திய விழா - 2016

2016- 18 வது கொடகே தேசிய சாகித்திய விழா செப்டம்பர் 09ந்திதகதி வெள்ளிக்கிழைமை பி.ப. 3.00 மணிக்கு கொழும்பு-07 இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் எஸ்.ஜீ..புஞ்சிஹேவா அவர்களின் தலைமையில் நடைபெறும். இவ்விழாவில் கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா வரவேற்புரையை நிகழ்த்துவார்.. சிங்கள மொழியிலான சிறப்புரையை பேராசிரியர் ஜே.பீ.திஸாநாயக்கா தமிழில் சிறப்புரையை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவரும் தாயக ஒலி ஆசிரியருமான தம்பு சிவா அவர்களும் நிகழ்த்துவார்கள்.

2016-18வது கொடகே தேசிய சாகித்திய விழாவில்; விருதுகள் பெறுவோர் விபரம்

வாழ்வு நாள் விருதுகள் பெறுவோர்:-

கலாநிதி ஹரிச்சந்ர விஜயதுங்க
கலாபூஷணம் பத்மா எதிரிசிங்க
பண்ணாமத்து கவிராயர் எஸ்.எம். பாரூக்

2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நாவலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது இம்முறை இரண்டு நாவல்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அந்த வரிசையில், மு.சிவலிங்கத்தின் பஞ்சம் பிழைக்க வந்த சீமை, வவுனியூர் இரா. உதயணனின் வலியின் சுமைகள் ஆகிய நாவல்களுக்கு வழங்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புக்கான கொடகே தேசிய சாகித்திய விருது.. கே.ஆர். டேவிட்டின் நீரில் கிழித்த கோடுகள் எனும் சிறுதைத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்க் கவிதைத் தொகுப்புக்கான கொடகே தேசிய சாகித்திய விருது ஈழக்கவி ஏ.எச்.எம் நவாஸின் ஏவாளின் புன்னகை எனும் கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டுக்கான சிங்களத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது சிங்கள எழுத்தாளர் கே. ஜயதிலக அவர்களின்; சிறுகதைகளை மாவனல்லை எம்.எம். மன்சூர் அவர்கள் 'பட்டி' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த நூலுக்கு வழங்கப்படுகிறது. 

2016-18 வது கொடகே தேசிய சாகித்திய விருதுக்காக தேர்வுக்கு அனுப்பட்ட நூல்களில் படைப்பாளிகளின்; முதல் நூலுகளுக்கான விருதுகளில் சிறந்த முதல் சிறுகதைத் தொகுப்புக்கான விருது பைந்தமிழ் குமாரனின் கானல் வசந்தங்கள் எனும் நூலுக்கும்

சிறந்த முதல் கவிதைத் தொகுப்புக்கான விருது செல்லக்குட்டி கணேசனின் ஒரு புள்ளியில் ஒடும் முட்கள்; எனும் நூலுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -