யாழ்பாணத்திற்குச்சென்ற தனியார் பஸ் விபத்து :18 பேர் காயம்

அப்துல்சலாம் யாசீம்-
திரகோணமலையிலிருந்து யாழ்பாணத்திற்குச்சென்ற தனியார் பஸ்ஸொன்று நிக்கவெவ பகுதியிலுள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானதில் நேற்றிரவு (24) 7.30 மணியளவில் 18 பேர் காயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளானவர்கள் பருத்தித்துறையைச்சேர்ந்தவர்கள் எனவும் திருகோணமலையிலுள்ள தமது உறவினர்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போதே வேகமாகச்சென்ற பஸ் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் 12 ஆண்களும் 06 பெண்களும் அடங்குவதாகவும் அதில் 07 பேரை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -