அரச ஊழி­யர்­க­ளின் ஜும்ஆ தொழுகைக்கு 2 மணித்­தி­யால விடு­மு­றை - முஸ்லிம்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு

ர­சாங்க சேவை­யி­லுள்ள முஸ்லிம் அரச ஊழி­யர்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழமை தினங்­களில் தமது மதக்­க­ட­மை­யினை (ஜும்ஆத் தொழுகை) நிறை­வேற்­று­வ­தற்கு திணைக்­கள தலை­வரின் விருப்­பத்­திற்­க­மைய இரண்டு மணித்­தி­யால விடு­மு­றையை வழங்க முடியும் என பொது நிரு­வாக அமைச்சின் சுற்று நிருபம் ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

கடந்த காலங்­களில் ஜும்ஆத் தொழு­கைக்­காக 1 மணித்­தி­யால விடு­முறை அவ­கா­சமே வழங்­கப்­பட்­டது. தற்­போது அது 2 மணித்­தி­யா­லங்­க­ளாக்­கப்­பட்­டுள்­ளது.. 

வெள்­ளிக்­கி­ழ­மை­களில் முஸ்லிம் அரச ஊழி­யர்­க­ளுக்கு ஜும் ஆ தொழு­கைக்­காக இரண்டு மணித்­தி­யால குறு­கிய விடு­முறை வழங்­கு­வது தொடர்­பாக தாபன விதிக்­கோ­வையின் திருத்தம் தொடர்பில் பொது நிரு­வாக அமைச்சு 21/2016 இலக்க சுற்று நிரு­பத்தை வெளி­யிட்­டுள்­ளது.

இச்­சுற்று நிருபம் 2016.08.30 ஆம் திகதி சகல அமைச்­சு­களின் செய­லா­ளர்கள், மாகாண பிர­தம செய­லா­ளர்கள் மற்றும் திணைக்­கள தலை­வர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. 

குறிப்­பிட்ட சுற்று நிரு­பத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

திணைக்­கள தலை­வரின் விருப்பின் பிர­காரம், சேவையின் தேவைக்கு எவ்­வித பாதிப்­பு­களும் ஏற்­படா வண்ணம், முஸ்லிம் அரச அலு­வ­லர்­க­ளுக்கு தமது வணக்க வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்­காக வெள்­ளிக்­கி­ழமை தினங்­களில் மதியம் 12 மணி­யி­லி­ருந்து இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்குச் குறை­யாத காலம் விசேட விடு­மு­றை­யாக வழங்­கப்­படும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

இது இவ்வாறிருக்க இது முஸ்லிம் அரச ஊழி­யர்­களின் அடிப்­படை உரி­மையை மீறு­வதால் அது வாபஸ் பெறப்­பட வேண்டும் என இலங்கை கல்வி நிரு­வாக சேவை உத்­தி­யோ­கத்­தர்­களின் கிழக்கு மாகாண சங்கச் செய­லாளர் ஏ.எல்.முஹமட் முக்தார் கோ­ரிக்­கை முன்­வைத்­துள்ளார். 

பொது நிர்­வாக அமைச்சின் செய­லாளர் மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இக்­கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

கோரிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

குறித்த சுற்று நிருபத்தில் திணைக்­களத் தலை­வரின் விருப்­பத்­திற்­க­மைய எனும் பதம் ஒரு முஸ்லிம் ஊழி­யரின் மதக் கட­மையை நிறை­வேற்ற பல தடை­களை ஏற்­ப­டுத்தும் வாய்ப்பு உள்­ளது.

முஸ்லிம் அல்­லாத திணைக்­களத் தலை­வர்கள் மதக்­க­ட­மையை நிறை­வேற்றும் வாய்ப்­பினை மறுக்­கலாம். 

குறிப்­பாக தமிழ், சிங்­கள பாட­சா­லை­களில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் தமது மதக்­க­ட­மையை வெள்­ளிக்­கி­ழ­மை­களில் நிறை­வேற்­று­வ­தற்கு இச்­சுற்­று­நி­ரு­பத்தை காரணம் காட்டி தடைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டலாம். இலங்கை அர­சி­ய­ல­மைப்பில் ஒவ்­வொரு பிர­ஜைக்­கு­மான மதச் சுதந்­திரம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

அச்­சு­தந்­தி­ரத்தை பொது நிரு­வாக அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள சுற்று நிரு­பத்தின் படி திணைக்­கள தலை­வ­ரிடம் கேட்டுப் பெற வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. 

எனவே குறித்த சுற்று நிருபம் மீளப் பெறப்­பட்டு மதச்­சு­தந்­தி­ரத்தைப் பேணும் வகையில் வெளி­யி­டப்­பட வேண்டும் என கோரப்­பட்­டுள்­ளது. 

இது தொடர்பில் பொது நிரு­வாக திணைக்­கள உயர் அதி­கா­ரி­க­ளிடம் கருத்து வின­வி­ய­போது இச்­சுற்று நிருபம் 1985 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வரு­வ­தா­கவும், குறிப்­பிட்ட குறு­கிய விடுமுறை இதுவரைகாலம் பிற்பகல்1 மணி முதல் 2 மணி வரையான காலமே ஒதுக்கப்பட்டிருந்தது.

அண்மையிலே இதில் நேரத்தில் மாத்திரமே மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது பி.ப.1 மணியிலிருந்து 2 மணி வரை என்றிருந்த நேரம் மதியம் 12 மணியிலிருந்து 2 மணிவரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார். 

விடிவெள்ளி ARA.Fareel
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -