டக்கஸ் பிறீமியர் லீக் – 2016 சம்பியனாக சம்மாந்துறை சுப்பர் கிங் அணியினர்..!

பைஷல் இஸ்மாயில் –
சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுகழகத்தின் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற டஸ்கஸ் பிறீமியர் லீக் 2016 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சாய்ந்தமருது பௌசி ஐக்கிய மைதானத்தில் (02) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ் இறுதிப்போட்டியில் சாய்ந்தமருது ஹொலி ஹீறோஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சம்மாந்துறை சுப்பர் கிங் விளையாட்டு கழகத்தினர் மோதினர். இப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை சுப்பர் கிங் அணியினருக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ், மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் ஆகியோர் இணைந்து வெற்றிக் கிண்ணத்தை, பணப் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது ஹொலி ஹீறோஸ் விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடினர். முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொலி ஹீறோஸ் அணியினர் 6 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 36 ஓட்டுங்களை பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை சுப்பர் கிங் அணியில் 3 விக்கெட்டுக்களை இழந்து 4.3 ஓவர்;களில் 39 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுக்களில் வெற்றி பெற்று டக்கஸ் பிறீமியர் லீக் – 2016 சம்பியனானது.

சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை சுப்பர் கிங் அணியினருக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசிலுடன் சம்பியன் கிண்னமும் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற சாய்ந்தமருது ஹொலி ஹீறோஸ் விளையாட்டுக் கழகத்திக்கு 5 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கிண்னமும் வழங்கி வைக்கப்பட்டது. இறுதிப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இவ்விரு அணியினரின் வீரர்களுக்கு கிண்னங்களை வழங்கி வைத்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -