2017 ஜனவரி முதல் வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளம் அதிகரிப்பு..!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் ஆகக்குறைந்த சம்பளத்தை 2017 ஆம் ஆண்டு முதல் 300 டொலர்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இடம்பெற்ற நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பளம் தொடர்பில் பல்வேறு நாடுகளுடனும் கலந்துரையாடி வருவதாகவும், அதேபோல் சில நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் இந்த குறைந்த சம்பள எல்லையை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மதம் முதல் அமுல்படுத்த முடியும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -