க.கிஷாந்தன்-
நம்நாட்டு மக்களின் தலைவிதியை மாற்றியமைக்க சோசலிச கொள்கையுடன் அரசாங்கம் ஒன்றை 2020 இல் அமைக்க மக்கள் வீடுதலை முன்னனிக்கு இந்நாட்டு மக்கள் கொள்கையுடனும் ஆதரவுடனும் வாக்களிக்க வேண்டும்.
கடந்த 68 வருடகாலமாக இநாட்டில் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றை ஆதரித்து ஆட்சியில் அமர வைத்து பரிட்சித்த மக்கள் எம்மையும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி பரிட்சிக்க வேண்டும். அப்போது இந்நாட்டை அரசியல் வாதிகள் எவ்வாறு நாசமாக்கினார்கள் என்பதை எடுத்துக்காட்டுவோம் என அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவரும், ஜே.வி.பி யின் மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்ரதேகரன் தெரிவித்தார்.
அட்டனில் 25.09.2016 அன்று நடைபெற்ற இச்சங்கத்தின் பத்தாவது மாநாட்டில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
நமது நாடு வெளிநாட்டுக்கு கடனாலியாக இருக்கின்ற வேலை கடனுக்கு சாப்பிடும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்கும் சம்பளத்தை கூட தரமுடியாத நிலை காணப்படுன்கின்றது. கடந்த 68 வருடகாலாக ஆட்சி பீடத்தில் அமர்த்திய இரண்டு பிரதான கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய வாக்குகளினால் ஒன்றும் நடைபெறவில்லை. இதனால் இன்றைய நிலையில் அமைத்து மக்களும் வாழ்வாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றோம்.
நாட்டுக்காக உழைக்கும் தொழிலாளர் வரக்கத்தில் நாளாவது பரம்ரை மக்களான தொழிலாளர்கள் தேயிலை தென்னை இறப்பர் ஆகியவற்றுக்கு உரமாகி வருக்கின்றனர். ஆனால் தேசிய வருமானத்தில் நூற்றுக்கு 13 வீதம் நமது மக்கள் உழைத்து கொடுக்கின்றார்கள். இவர்கள் புதிய மாற்றத்திற்க்கு நகரவேண்டும். ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்வு கோரி நிற்கும் தொழிலாளர்களுக்கு இத்தொகையை பெற்றுத்தருவதாக நாட்டின் பிரதமர் மற்றும் முற்போக்கு கூட்டனியினர் இவர்களோடு இ.தொ.கா போன்றவை தேர்தல் மேடைகளில் கூறிய வார்த்தை நிறைவேற்றமடைந்துள்ளதா?
கடைசியில் சொற்ப சம்பளத்திற்கு மாதகணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாட்த்திட உள்ளவர்கள் வித்தை காட்டுகிறார்கள். இவர்களிடம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இல்லாமல் முதலாளிமார் சம்மேடத்துடனும்; அரசாங்கத்துடனும் முக்கிய கட்டங்களில் வாய்மூடிகளாக இருக்கின்றனர். முற்போக்கு கூட்டணியினர் என்று சொல்வோர் பெற்றுக்கொடுத்த 2500 ரூபாவுக்கு சொந்தகாரர் இவர்கள் அல்லர்.
அனைத்து நிறுவன ஊழியர் சங்க தலைவர் வசந்த சமரசிங்க பாராளுமன்றதில் கொண்டுவந்த பிரேரணைக்கு அமைவாகவே இந்த தொகை கிடைக்கப்பெற்றது. ஆனால் தம்பட்டம் அடிக்கும் த.மு.கூட்டணி தொடர்ந்து நிலையாக கிடைக்கப்பெறவேண்டிய இந்த 2500ஐ நாளுக்கு 100 ரூபாய் என்ற ரீதியில் மட்டுப்படுத்தி பிரதமரிடம் கெஞ்சிக்கேட்டு பெற்றுகொடுத்துள்ளனர்.
இவ்வாறு போலித்தனமான உடன்படிக்கைகள் மலையக தொழிலாளர்களை குறிவைத்து நடந்தேறி வருகின்றது. 1 1.2 வருட சம்பள எதிர்பார்ப்பு கனவாகவே இருக்கின்றது என்பதை நாம் உணரவேண்டும். இருந்தும் நாட்டில் 3 மாவட்டங்கள் மதுவூக்கு அடிமையாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அன்மையில் கூறினார். வடக்கு கிழக்கு நுரவெலியா என தமிழர் பிரதேசங்கள் இவவகையாக அடிமையாக்கப்பட்டமை அங்குள்ள அரசியல்வாதிகள் மூலமாகவே என்பதை ஜனாதிபதி உணரவேண்டும் எனத் தெரிவித்தார்.