இஸ்ரேலிய நகரான டெல் அவிவில் நிர்மாணிக்கப்பட்டு வந்த கார் தரிப்பிடமொன்று இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ரமாத் ஹாயில் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 7 பேர் இடிபாடுகளின் கீழ் தொடர்ந்து சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கார் தரிப்பிடத்திற்கான பல மாடிக் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாரந்தூக்கி உபகரணமொன்று அந்தக் கட்டடத்தின் மீது சேதமடைந்து விழுந்தமையே இந்த அனர்த்தத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட அறி க்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் பெருமளவு தீயணைப்புப் படைவீரர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.