உங்களுக்காக அரச சேவை : 24ம் திகதி மட்டக்குளியில் - அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு

“உங்களுக்காக அரச சேவை” என்ற தொனிப்பொருளில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் அமைச்சினால் நடத்தப்படும் மாபெரும் நடமாடும் சேவையின் மூன்றாவது நிகழ்வு மட்டக்குளி புனித ஜோன் வித்தியாலய வளவில் எதிர்வரும் சனிக்கிழமை 24ம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 3.30மணி வரை நடைபெறும். 

இந்த நடமாடும் சேவையின் மூலம் பின்வரும் அரச சேவைகளை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்:

·பிறப்புச் சான்றிதழினை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல் (ஆங்கிலம் / சிங்களம் / தமிழ்)

· பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை (பெயர் / தந்தையின் பெயர் / தாயின் பெயர் / பிறந்த இடம்) அடையாளம் கண்டு அவற்றைத் திருத்திக் கொடுத்தல்

· பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் புதிய பிரதியை வழங்குதல்

·தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள்

·ஊழியர் சேமலாப நிதித் தொகை விசாரணைகள், கடன் வசதி பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்

· போக்குவரத்து திணைக்களம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு

· நீர், வரிப்பணம், மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு

·தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு

·சட்டரீதியான பிரச்சினைகளுக்கான தீர்வு

இந்த நடமாடும் சேவையில் பின்வரும் அரச நிறுவனங்கள் கலந்துக்கொள்ளும்:

01. அரசகரும மொழிகள் திணைக்களம்

02. அரசகரும மொழிகள் ஆணைக்குழு

03. பிறப்பை பதிவு செய்யும் பதிவாளர் நாயகம் திணைக்களம்

04. ஆட்பதிவுத் திணைக்களம்

05. ஊழியர் சேமலாப நிதி காரியாலயம்

06. பொலிஸ் திணைக்களம்

07. இலங்கை மத்திய வங்கி

08. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

09. இலங்கை மின்சார சபை

10. கொழும்பு மாநகர சபை

11. சட்ட உதவி ஆணைக்குழு

12. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

13. கொழும்பு பிரதேச செயலகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -