25,000 ரூபாய்க்கு 50,000 ரூபாய் கடன் பெற்று வரவேற்பு வைப்பது நிறுத்தப்படவேண்டும் - முதலமைச்சர் நஸீர்

கிழக்கு மாகாணத்தில் இன்று பாரிய சேவைகள் என்றும் இல்லாதவாறு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இச்சேவைகளைத் தங்களின் காலத்தில் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்வில் எதிராளிகள் புலம்பிக் கொண்டிருப்பது அவர்களின் பொய்யான அறிக்கைகள் மூலம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் 25,000 ரூபாய் பணம் ஒதுக்கி விட்டு 50,000 ரூபாய் கடன் பெற்றும் வரவேற்பு நடாத்தும் கேவலமான அரசியல் கலாச்சாரத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் அப்படியான ஒரு வரவேற்பினை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் பொதுச் சந்தை பெண் சந்தை அமைப்பது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்களின் சந்திப்பின் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்:

இன்றைய நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் சரியான சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதற்காக அனைத்து நிருவாகத்தினரையும் திறம்பட செயற்பட வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம், குடி நீர்வசதி என்று அன்றாட தேவைகள் அனைத்தும் சரியான முறையில் மக்கள் அனைவரும் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காக நாம் ஒவ்வொருநாளும் பல மணிநேரங்கள் மக்களுக்காக ஒதுக்கி செயற்பட்டு வருகின்றோம்.

ஆனால் இப்படியான சேவைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களது ஆட்சியின்போது விளையாடிக்கொண்டிருந்த சில அரசியல்வாதிகள் தங்களால் எதுவும் செய்ய முடியாமல் அறிக்கை மன்னர்களாகவும், மற்றவர்களை பொய்யாகச் சாடுபவர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றனர். நாம் கிழக்கு மாகாணத்தில் ஒரு புரட்சிகரமான அரசியல் செய்து மூவின மக்களின் தேவைகளும் அவர்களின் பிரதேசங்களையும் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து விட்டே ஓய்வினைப்பெறுவோம்.

எனவே இப்படியான போலித்தனமான விசம அறிக்கைகளுக்கு எல்லாம் பின்நிக்கும் அரசியல்வாதிகளாக இல்லாமல் எங்களது அதிகாரங்கள் என்னவோ அதற்குள் இருந்து கொண்டு சகல சேவைகளையும் திறம்பட செய்து முடிக்கும் நடவடிக்கையினை மேர்கொள்கிறோம். அத்துடன் எங்கெல்லாம் நாங்கள் செல்கின்றோமோ அங்கெல்லாம் எங்கள் சேவைகள் இருக்கும் தேவையில்லாமல் பிறரின் வேலைகளில் எங்கள் அதிகாரத்தை மீறி எதனையும் செய்யவும் மாட்டேன் மாகாண அதிகாரத்துக்குட்பட்ட விடையத்தில் பிறர் துஸ்பிரயோகம் செய்ய அனுமதிக்கவும் மாட்டேன். யாருடைய சேவைகளிலும் கையவைக்க நாங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியின் முதலமைச்சரின் அதிகார எல்லைக்குள் அதிகாரத்திற்குட்பட்டவைகளைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளிலும் உள் நுளைந்து குழப்பம் விளைவிக்க நாம் விரும்புவதில்லை. கடந்த வாரம் மாகாண சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் எனது காரியாலயத்துக்கு வந்து அவர்களுக்கும் ஐரோட் திட்டத்தில் வந்திருக்கும் வீதிகளை பகிர்ந்து தாருங்கள் என்று கேட்டார்கள். நாங்கள் அவர்களை ஒதுக்கிவிடாது தருகிறேன் என்றே கூறினேன்.

ஆனால் அதிகாரங்கள் என்ன என்பதனைத் தெரியாத சில அரசியல்வாதிகள் தங்கள் தசாப்த காலங்களை வீணாக கழித்து விட்டு இன்று சேவைகளை இப்படித்தான் செய்யவேண்டும் என்று நாம் ஆரம்பிக்கும்போது வந்து மூக்கை நுளைத்து தடுப்பதிலும் தாமதப் படுத்துவதிலும் இறங்குவது அவர்களின் ஏமாற்று அரசியலை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாகத் தெறிகிறது.

ஆகவே ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மக்களுக்கு எதனைச் செய்ய முடியுமோ அதனை சரியாக செய்யுங்கள், மற்றவர்கள் செய்யும் சேவைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போலித்தனமான முறையில் அறிக்கை விட்டு உங்கள் முயலாமையைக் காட்டாதீர்கள் அதனை மக்களே விழங்கிக் கொள்வார்கள். இன்று கிழக்கில் எத்தனையோ கிராமங்கள் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதனை கண்டும் காணாதவர்கள் போல் இருக்கின்றனர், அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து ஓரளவேனும் உதவிகள் செய்யும் மனப்பாங்கு இந்த அரசியல்வாதிகளுக்கு இதுவரை வரவில்லை என்பதனை நினைத்து கவலையடைகிறேன்.

எனவே அரசியல் என்பது எனது தொழிலல்ல. அரசியல் செய்வது இப்படித்தான் என்பதனை சரியாகச் செய்து காட்டவும் இன்றைய அரசாங்கத்தின் நிதிகள் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது எமது மாகாணம் எவ்வாறு அபிவிருத்து காண்கிறது என்பதனையெல்லாம் சரியாகச் செய்து காட்டவே அதிகாரங்களைப் பெற்ற நாம் எங்கள் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம். அதனால் நாம் எங்களால் முடிந்ததனை சரியாகச் செய்வோம் பிறரின் வேலைகளைல் தலையிடமாட்டோம். பெயர்வைக்க எங்கும் செல்ல மாட்டோம் என்பதனை இயலாமையில் இருக்கும் அரசியல்வாதிகள் புரிந்து தங்களின் சேவைகளைச் செய்ய முன்வரவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதுரையில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -