கல்முனைக்கு ஒதுக்கப்பட்ட 26 மில்லியன் தொடர்பிலான கலந்துரையாடல்...!

அஸ்லம் எஸ்.மௌலானா-
கர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 26 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கல்முனை நகர பொதுச் சந்தை புனரமைப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மட் கனி, மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கல்முனைக்குடி முஹைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் டாகடர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் மற்றும் சந்தை வர்த்தக சங்கத்தின் சலீம் ஹாஜியார் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். 

இதன்போது சந்தை புனரமைப்பு பணியை அவசரமாக ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன் அத்திட்டத்தை மேற்கொள்வதிலுள்ள தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இப்புனரமைப்பு பணியானது வர்த்தகர்களின் விருப்பப்படியே மேற்கொள்ளப்படும் எனவும் அதன்போது எவ்வித திணிப்புகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உறுதியளித்ததுடன் தான் மாநகர முதல்வராக இருந்த காலப்பகுதியில் இவ்வாறான புனரமைப்பு திட்டத்திற்கு நிதியுதவி வழங்க யூ.எஸ்.எயிட் நிறுவனம் முன்வந்தபோதிலும் நமக்குள் ஒருமைப்பாடு இருக்காததன் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது போன்றதொரு துரதிஷ்டநிலை இனியொருபோதும் ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை இப்புனரமைப்பு பணி துரித கதியில் செய்து முடிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர். கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளின் பேரில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 26 மில்லியன் ரூபா நிதியை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -