தாயுடன் தோட்டத்துக்குச் சென்ற 4 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி..!

க.கிஷாந்தன்-
டுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை அமுனதோவ பிரதேசத்தில் தன்னுடைய தாயுடன் தோட்டத்துக்குச் சென்ற 4 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 16.09.2016 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தேவராஜ் சஜீவன் என தெரியவந்துள்ளது. கிணற்றில் விழுந்து கிடந்த தோடம் பழத்தை எடுப்பதற்காகச் சென்ற போதே சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மெதியத்தென்ன பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -