காத்தான்குடி ஆதார வைத்தியாசலை அபிவிருத்திக்கு ஹிரா பௌண்டேஷன் 4 ஒப்பந்தங்களில் கைச்சாத்து..!

காத்தான்குடி ஆதார வைத்தியாசலையில் அமைக்கப்படவுள்ள தீவிர மற்றும் அவசர பிரிவுகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் ஒரு கோடி 29 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான நான்கு ஒப்பந்தங்களில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் கையெழுத்திட்டுள்ளது. 
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் 100 மில்லியன் ரூபா செலவில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) ஆகியவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் timothy sela, technomedics international, mediechnology holdings(pvt)ltd, biomed international ஆகிய நிறுவனங்களுடன் ஒரு கோடி 29 இலட்சம் பொறுமதியான நான்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

44 இலட்சம் ரூபா பொறுமதியான biomed international நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் அதன் பொது முகாமையாளர் ஜுட் சுவீதரன் மற்றும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கைச்சாத்திட்டனர். 

40 இலட்சம் ரூபா பொறுமதியான mediechnology holdings(pvt)ltd நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் அதன் பிரதேச முகாமையாளர் மதுஷான் பண்டார மற்றும் ஹிரா பௌண்டேஷன் தலைவர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

timothy sela நிறுவனத்துடன் 17 இலட்சம் ரூபா பொறுமதியான ஒப்பந்தத்தில் அதன் பொது முகாமையாளர் தீமோத்தேயு செலா மற்றும் technomedics international நிறுவனத்துடன் 28 இலட்சம் ரூபா பொறுமதியான ஒப்பந்தத்தில் அதன் வர்த்தக அபிவிருத்தி நிர்வாகி நாகராஜா ஆனந்தராஜ் ஆகியோர் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர். 

இலங்கையில் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பல குறைபாடுகளை இணங்கண்டு அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்து வருகின்றது. அந்தவகையில், அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை 100 மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கவும் முன்வந்துள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பல நிறுவனங்களடமிருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன. 

ஏற்கனவே, மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக அண்மையில் gene diagnostics நிறுவனத்துடன் ஒரு கோடி 85 இலட்சம் பொறுமதியான ஒப்பந்தத்திலும், mg medicals (pvt)ltd நிறுவனத்துடன் ஒரு கோடி 29 இலட்சம் ரூபா பொறுமதியான ஒப்பந்தத்திலம் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் கைச்சாத்திட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -