வடக்கு மாகாண சபையின் 61 மாதாந்த அமர்வு : சிவாஜிலிங்கம், அஸ்மின் விவாதம் - வீடியோ

பாறுக் ஷிஹான்-
டக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் ஆளுநர் பக்கமா.? தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பக்கமா என்பதனை தெளிவு படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பக்கமே என உறுப்பினர் அஸ்மின் பதிலளித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 61 மாதாந்த அமர்வு நேற்றைய(6) தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.  இதன் போது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரால் நலன்புரி முகாம் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பிலான விவாதம் நடைபெற்றது.

இதன் போதே உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அயூப் அஸ்மின் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரேயுடன் சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனை சந்தித்திருந்தார். இவர் யாருடைய பக்கம் நிக்கின்றார் என்பது எமக்கு சந்தேகமாக இருக்கின்றது. அதனை உறுப்பினர் அஸ்மின் தெளிவுபடுத்தப்பட வேண்டும். என்றார் சிவாஜிலிங்கம்.

இதற்கு பதிலளித்த உறுப்பினர் அயூப் அஸ்மின், 

யாழ்ப்பாணம் வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றினை முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் அனுப்பியிருந்தோம். இதற்கு பதிலளித்த ஐ.நா அலுவலகத்தினர்,

பான் கீ மூனின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் திட்டமிடப்பட்டதாகும், ஆகையால் அவர்கள் அனுமதிக்காத கூட்டத்தினை தம்மால் ஒழுங்கு செய்ய முடியாது எனவும், கோரிக்கைகள் ஏதும் கையளிக்க வேண்டுமென்றால் அதனை வடக்கு மாகாண ஆளுநரின் சந்திப்பின் பின்னர் கையளிக்க முடியும் என கூறப்பட்டது.

இதன் பின்னரே ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனை சந்தித்து எமது கோரிக்கைகளை அறிக்கை வடிவில் கையளிக்க சென்றிருந்தோம். மாறாக ஆளுநருடன் சேர்ந்து சந்திக்கவில்லை. ஆளுநரும் இந்த சந்திப்பை ஏற்படுத்தி தரவில்லை என்றார் – அஸ்மின்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -