காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலய அபிவிருத்திக்கு, ஹிஸ்புல்லாஹ் 6.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..!

ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கி வருகின்ற காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் 6.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பாடசாலை நிர்வாகம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எஎம்.ஹிஸ்புல்லாஹ்விடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அவரது சிபாரிசின் பேரில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் நிழவும் வகுப்பறை பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் முகமாக இந்நிதி, வகுப்பறை கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளது. 

இதற்கான நிதி ஒதுக்கீட்டுக் கடிதம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்;புல்லாஹ்வின் ஆலோசனைக்கு அமைய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளரினால் மட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -