பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன கடந்த 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் திகதி பிறந்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசின் 6 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இவர் கடந்த 2015 ஜனவரி 08 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.
1989 இல் இவர் முதன் முதலில் அரசியல் வாழ்வை ஆரம்பித்துள்ளார். இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே தனது அரசியலை ஆரம்பித்தார். 1989 ஆம் ஆண்டே இவர் இலங்கை பாராளுமன்றத்தில் முதன் முதலில் பிரவேசித்துள்ளார்.
1994 முதல் 2014 ஆம் ஆண்டு நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல பொறுப்புக்களை வகித்துள்ளார். இவர் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டுள்ளார்.
2014 நவம்பர் 21 ஆம் திகதி அரசாங்கத்தின் பொறுப்புக்களிலிருந்து நீங்கி அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணி அமைத்தார். தற்பொழுது நாட்டின் ஜனாதிபதியாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றார்.