9 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் நன்னடத்தைக் காரியாலயம் : அமைச்சர் நஸீரினால் திறந்து வைப்பு

பைஷல் இஸ்மாயில் -
ட்டக்களப்பு, பட்டிருப்புக் கிராமத்தில் 9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் நன்னடத்தைக் காரியாலயத்தை கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை, சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் எஸ்.சுதீஸ்னர் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை, சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்த திறப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரை ராஜசிங்கம் மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.கருணாகரன், ஜீ.கிரிஸ்ணப்பிள்ளை, ஆர்.துரைரத்ணம், எம்.நடராஜா ஆகியோர்களுடன் கிழக்கு மாகாண கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை, சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாயர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஜே.உசைனுதீன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -