இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் 9 வீதிகள் செப்பனிடல்..!

சிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "I road project" வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 23 கிலோ மீற்றர் தூரம் கொண்ட 9 வீதிகள் உள்வாங்கப்பட்டு காபட் இடப்பட்டு புனரமைக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்கவே இவ்வீதிகள் உள்வாங்கப்பட்டு புனரமைக்கப்படவுள்ளன. 

இதற்கமைய மட்டக்களப்பு வீதி அதிகார சபையின் "I road project" பிரிவு இதற்கான வேலைகளை தற்போது ஆரம்பித்துள்ளது. வீதி அதிகார சபையின் "I road project" க்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் திருமதி ஜெனிபருடைய மேற்பார்வையில் அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 7 வீதிகளை "I road project" குழுவினர் பார்வையிட்டிருந்தனர். மேற்படி வீதிகளுடைய வரைபடங்கள் மற்றும் ஏனைய தகவல்களை அவர்கள் இதன் போது திரட்டியிருந்தனர்.

"I road project" திட்டத்துக்கு அமைவாக மத்திய கோரளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதி, ஆரயம்பதி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலமுனை மற்றும் காங்கயனோடை பிரதான வீதிகள், காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கடற்கரை வீதி, டெலிகொம் வீதி, லகூன் டிரைவ்; வீதி, டீன் வீதி தொடக்கம் - கடற்கரை வீதி வரை, கர்பலா - பாலமுனை வீதி மற்றும் மன்முனை வடக்கு செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஞ்சத்தொடுவாய் ஹிஸ்புல்லாஹ் வீதி ஆகியன இத்திட்டத்தின் கீழ் காபட் செய்யப்படவுள்ளன. 

குறித்த 9 வீதிகளுக்குமான காபட் இடும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இவ்வீதிகள் அனைத்தும் சுமார் 9 மீற்றர் அகலம் கொண்டதாக காபட் இடப்பட்டு செப்பனிடப்படவுள்ளமை விசேட அம்சமாகும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் "I road project" வீதி காபட் இடும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிலோ மீற்றர்கள் காபட் இடப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -