தடுக்கப்பட்ட காத்தான்குடி பஸ் நிலையத்தை மீண்டும் அமைக்க முயற்சி..!

ஊடகப்பிரிவு-
கர திட்டமிடல் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமானயு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் காத்தான்குடி மத்திய பஸ் தரிப்பு நிலையத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

காத்தான்குடி நகரசபையின் தவிசாளராக முபீன் பதவி வகித்த போது USAID நிறுவன நிதியுதவியூடாக கடைத்தொகுதியுடன் கூடிய மத்திய பஸ் தரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தமையும் அது சதிகாரர்களால் திட்டமிடப்பட்டு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இல்லாமலாக்கப்பட்டமையும் பொதுமக்கள் அறிந்த விடயமாகும். 

தற்பொழுது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவ்கள் தனது அமைச்சினூடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் காத்தான்குடிக்கான மத்திய பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதை பொறாமை கொண்ட அரசியல் வாதிகளினால் ஏற்கனவே தடுக்கப்பட்டதையும் தலைவர் றவூப் ஹக்கீமுக்கு விளக்கிக் கூறிய முபீன் காத்தான்குடிக்கான மத்திய பஸ் தரிப்பு நிலையம் தனியார் வாகனத்தரிப்பிடம் ஆட்டோ தரிப்பிடம் உள்ளிட்ட வசதிகளுடனும் மேலும் காத்தான்குடியின் நிலப்பற்றாக்குறையையும் கவனித்து சிறு வியாபாரிகளுக்கான சிறிய அளவிலான பரப்பைக் கொண்ட கடைத் தொகுதிகள் மாநாட்டு மண்டபம் திருமண மண்டபம் தங்குமிட அறைகள் உள்ளடங்கிய கட்டடத் தொகுதியை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவையும் முபீன் சமர்ப்பித்தார். இதன் போது றவூப் ஹக்கீம் உடனடியாக இதற்குரிய காணியை அடையாளப்படுத்துமாறு கூறினார். நல்லாட்சி அரசாங்கமானது உருவாக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் ஹக்கீமின் பணிப்பின் பேரில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு முபீனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் மட்ட அபிவிருத்திக் குழு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் செய்த போது இக்குறிப்பிட்ட பஸ் நிலையம் அமைப்பதற்கான காணியையும் பார்வையிட்டனர்.மேற்படி காணி முபீன் நகர சபையின் தலைவராகவிருந்த போது ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் நிருவாகத்துடன் பலசுற்று பேச்சுவார்ததை நடாத்தி பாரிய முயற்சியின் பின்னரே இக்காணி பஸ்தரிப்பு நிலையம் அமைக்க பள்ளிவாயலினால் நகரசபைக்கு கையளிக்கப்பட்டது.

ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலின் இரண்டு கால நிருவாகங்களோடு இது தொடர்பாக தொடராகப்பேசியே இக்காணி பெறப்பட்டது. கடைத் தொகுதியுடன் அமைக்கப்படும் இப்பஸ்தரிப்பு நிலையத்தின் கடைத்தொகுதியின் அரைப்பங்கை பள்ளிவாயலுக்கு வழங்குவதென அப்போது தீர்மானிக்கப்பட்டது. இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தற்போதைய ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் நிருவாகம் இக்காணியில் கடைகளை நிர்மாணிப்பதற்காக அனுமதியைக் கோரி நகரசபைக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது. இது தொடர்பாக விடயமறிந்த முபீன் நகரசபைக்கு உடனடியாகச் சென்று அப்போதைய செயலாளர் சர்வேஸ்வரனைச் சந்தித்து இக்கட்டிட விண்ணப்பத்தை அனுமதிக்க வேண்டாமென்றும் இது பஸ் தரிப்பு நிலையத்திற்குரிய காணி என்பதைத் தெளிவுபடுத்தியதுடன் இதற்கான எதிர்ப்புக்கடிதத்தையும்(Objection Letter) தற்போதைய செயலாளர் சாபிக்கு வழங்கியதுடன் அதன் பிரதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும் மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கும் அனுப்பியிருந்தார்.புpன்னர் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் நிர்வாகத்துக்கு இவ்விடயம் தொடர்பில் சந்திப்புக்கு நேரம் தருமாறு கோறி கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்திற்கு ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் நிருவாகம் அதன் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் அவர்களை சந்திக்குமாறு பதிலளித்திருந்தது. பின்னர் தொலைபேசியில் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயின் தலைவரோடு உரையாடிய போது இக்காணியில் சந்தைத் தொகுதி அமைக்க உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார். சந்தையையும் பஸ் தரிப்பு நிலையத்தையும் அமைப்பதற்கு என்னால் தலைவர் றவூப் ஹக்கீமிடமிருந்து நிதியைப்பெற்றுத்தர முடியுமென இதன்போது முபீன் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலின் தலைவருக்குத் தெரிவித்தார். முபீன் இது தொடர்பில் விரைவில் பள்ளிவாயல் நிருவாகத்துடன் சந்திப்பை நடாத்தி சம்மதத்தைப் பெற்று பஸ் தரிப்பு நிர்மாண பணிக்கான பூர்வாங்க திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -