உடுவில் மகளீர் கல்லுரி மாணவிகள் ஜனாதிபதியை சந்திப்பு..!

டந்த பல நாட்களாக அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க கோரி நடைபெற்று வந்த போராட்டம் தொடர்பாக மாணவிகள் அங்கஜன் ராமநாதினிடம் ஜனாதிபதியிடம் தங்களது கோரிக்கையை முன்வைக்க ஏற்பாடு செய்து தருமாறு வைத்த கோரிக்கையை இன்று யாழ்பாணம் வருகைதந்த ஜனாதிபதியிடம் கூறுவதற்கு அங்கஜன் இராமநாதன் ஏற்பாடு செய்து கொடுத்ததனால் இந்த சந்திப்பு இடம்பெற்றது இதனால் அவர்கள் தங்களின் கோரிக்கையை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளித்தனர் 

அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த ஜனாதிபதியை அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அவரிடம் குறித்த மகஜரை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டுமென பாடசாலையின் மாணவிகள் மற்றும் பெற்றோர் இணைந்து கடந்த சனிக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -