புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க “கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின்” கீழ் உள்வாங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்துக்கு அமைய காத்தான்குடி அஷ்ஷஹதா வீதி, காத்தான்குடி -1 வாவிக்கரை வீதி, கல்மீஸான் வீதி, பழைய ஜீ.எஸ்.ஒழுங்கை உள்ளக வீதி,எஸ்.எல்.எம்.வீதி,காத்தான்குடி-5 வாவிக்கரை வீதி, முஷின் மௌலானா வீதி, மார்க்கட் சதுக்க உள்ளகவீதி மற்றும் தெற்கு எல்லை வீதி ஆகியன பூரணமாக கொங்கிறீட் இடப்படவுள்ளது. அத்துடன் ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரி வீதி வடிகர்ன்களுக்கான கொங்கிறீட் மூடியும் போடப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அடிக்கல் நட்டியும் வைத்தார். இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, முன்னால் நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், முன்னாள் நகரசபை உறுப்பினர் ரஊப் ஏ மஜீட் மற்றும் பிரதேச செயலாளர் முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.