ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது தேசிய மாநாட்டின் வெற்றி தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளு10ராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் அவரது அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (07) நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது தேசிய மாநாடு நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக இடம் பெற்றதாகவும், வரலாறுகாணாதளவு மக்கள் வெள்ளம் நாடு பூராவும் இருந்து வந்து கலந்து கொண்டதாகவும் தெரிவித்த அமைச்சர் இந்த நிகழ்வு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் மக்கள் கொண்ட நம்பிக்கையும், கட்சியில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையுமேயாகும் என்றார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் எதிர் வரும் உள்ளு10ராட்சித் தேர்தல் தொடர்பாக தெரிவிக்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் உள்ளு10ராட்சித் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் நிறைவடைந்தவுடன் அதனை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் இம்மாதம் அதனை நிறைவு செய்தால் நாங்கள் தேர்தலை நடாத்த தயாராகவே உள்ளோம் என்றும் இந்த தேர்தலுக்கும் எமது அரசு அஞ்சப்போவதில்லை காரணம் பல்வேறுபட்ட சிக்கள்களுக்கு மத்தியில் ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் அத்துடன் எமது தேசிய அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலிலும் நல்ல வெற்றியைக் கண்டுள்ளதால் உள்ளு10ராட்சித் தேர்தலில் அச்சப்படுவதற்கோ அல்லது அஞ்சுவதற்கோ இடமில்லை என்றும் விரைவாக உள்ளு10ராட்சித் தேர்தலை நாம் நடாத்தி முடிப்போம் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி நிற்பது தொடர்பாக ஊடனவியலாளர் ஒருவர் கேட்டதற்கு நாங்கள் மஹிந்தவை பிரிக்கவில்லை என்றும் அவரே தற்போது பிரிந்து நிற்பதாகவும் அவர் எந்த நேரத்திலும் வந்து எம்முடன் இணைந்து செயற்படலாம் அவரை நாம் பிரித்துவிட வில்லை என்றும் தெரிவித்த அவர் மஹிந்த புதிய கட்சி ஆரம்பித்தாலும் எமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் இன்று இந்த நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் இருக்கின்றார்கள். அவர்கள் யதார்த்தத்தை புரிந்துள்ளார்கள் அதனால் எமக்கப் பயமில்லை என்றார்.
இதேவேளை மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் இப்ராஹிம் அன்ஸார் மலேசியாவில் வைத்து தனது கடமையின்போது தாக்கப்பட்டமை தொடர்பாக தாங்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டீர்கள் என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் நாம் மலேசிய அரசாங்கத்திற்கு எமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என நான் மலேசிய அரசிடம் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.