ஏ.எல்.எம்.ஷினாஸ்-
மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் (12) காலை 6.15 மணிக்கு இடம்பெற்றது. இங்கு குத்பா பிரசங்கம் நிகழ்தும் போதே மெளலவி முபாறக்(மதனி) இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தனதுரையில்;
கொலைகள் அதிகரிப்பது மறுமையின் அடையாளமாகும். இன்று எமது சமூகத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மறுமையின் அடையாளமாக கொலைகள் எவ்வாறு அதிகரிக்குமென்றால்; கொலை செய்கிறவனுக்கு ஏன்?கொலை செய்கிறேன் எனத் தெரியாமல் இருக்கும் , கொலை செய்யப் பட்டவனுக்கு ஏன்?கொலை செய்ப்பட்டேன் எனத் தெரியாமல் இருக்கும். இன்று இவ்வாறான கொலைச் சம்பவங்கள் தான் அதிகரித்துள்ளன. சமூக அநீதிகளை கண்டு இளைஞர்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர். குர்ஆன், கதீஸை தாண்டி உணர்ச்சிக்கு கட்டுப்பட முடியாது. இவ்வாறான ஒரு குழுவாகவே ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இளைஞர்கள் காணப்படுகின்றார்.
நபி (ஸல்) அவர்கள் "எனக்கு பின்னால் ஒருவரை ஒருவர் கழுத்தின் பிடரியை வெட்டிக் கொண்டு காபிராகாதீர்கள்" எனச் சொன்னார்கள்.
இன்று முகநூல் பக்கங்களில் எதனை செய்கின்றோம் இதனுடைய விளைவு என்ன என்பதைக்கூட அறியாமல் சிலர் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்றைய ஹஜ்ஜுப் பெருநாள் தினம் எவ்வாறு புனிதமானதோ அதே போன்றுதான் அடுத்தவருடைய சொத்துகள், மானம், உயிர் புனிதமானதாகும். அபாண்டமாக குறைகளை கூறி பகிரங்கமாக முகநூல் பக்கத்தில் பதிவு செய்பவர்களுக்கு நிச்சயம் அதனுடைய விளைவு மிக மோசமானதாக இருக்கும். மற்றவருடைய மானத்தை பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும் என்ற நினைவோடு செயற்பட வேண்டும் என்றார்.
இங்கு ஆண், பெண் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.