எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிசாட் பதியுதீனை விமர்சிப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித அருகதையும் இல்லை. அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டளைச்சேனை பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.எம் .சமீர் ஹாஜி தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்: அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொடர்பில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதினைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு இல்லை .
அமைச்சர் ரிசாட் பதியுதீனை காரசாரமாக விமர்சித்துள்ள அவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அம்பாறை மாவட்ட மக்களுக்கு செய்துள்ள சேவைகள் ஒன்றையேனும் நினைவு கூறவில்லை. இதிலிருந்து அவரின் உள்நோக்கம் தெளிவாகின்றது. இதனை அம்பாறை மாவட்ட மக்களும் நன்கறிந்துள்ளனர். முன்னால் பாராளுமன்ற உறுப்பினரின் கபட நாடகம் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை என்பதை அவர் தெளிவாக தெரிந்துகொண்டிருப்பார்.
அமைச்சர் ரிசாட் பதியுதீனை மாத்திரமன்றி ஏனைய முஸ்லிம் தலைமைகளையும் சாடியுள்ள அவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்துள்ளமை கவலையளிக்கின்றது. இவ்வளவு விபரங்களை அறிந்து தெரிந்து வைத்துள்ள முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியுடனும் அமைச்சர் ரிசாட்டுடனும் இணைந்திருந்தவர் என்பதை ஒருபோதும் நாங்கள் மறந்துவிடலாகாது ..
மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசியல் பிரமுகர்கள் ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடக்கூடாது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தவும் கூடாது. இவ்வாறான பச்சோந்தி அரசியலில் ஈடுபடுபவர்கள் மக்கள் மத்தியில் ஒருபோதும் பிரகாசித்தது கிடையாது. இது கடந்த கால வரலாறு ஆகும் .
குறித்த உருப்பினரைக்கூட மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதை அவர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.