க.கிஷாந்தன்-
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஒயா உடரதல்ல தோட்டத்தில் குடியிருப்பு பகுதியில் காணப்படும் மின் கம்பங்கள் அனைத்தும் உக்கிப்போன நிலையில் காணப்படுவதுடன், மின் கம்பங்கள் உடைந்து கீழே விழ கூடிய அபாயத்தில் காணப்படுவதாக இத் தோட்டத்தில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான மின்சார கம்பங்களை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அச்சத்துடன் வாழ்வதோடு பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிப்பதோடு, இந்த மின்கம்பங்கள் கீழே விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலை குறித்து மக்கள் அதிகம் புலம்பி வருகின்றனர்.
எனவே உக்கிப்போயுள்ள இந்த மின்கம்பங்களை உடனடியாக திருத்தி அமைத்து தர வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.