ஊடகவியலாளர் லசந்தவின் சடலம் இன்று தோண்டியெடுக்கப்பட்டது..!

அஷ்ரப் ஏ சமத்-
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் இன்று பொரளை பொது மயானத்திலிருந்து மீண்டும் தோண்டி தோண்டியெடுக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் கல்கிஸை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.

அதற்கமைய கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் காலை 8.30 மணிக்கு லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கும் பணிகள் ஆரம்பமானது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். களுபோவில வைத்தியசாலையில் அப்போது முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் குறைபாடுகள் இருப்பதால் அதனை நிவர்த்தி செய்ய இவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதனை ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளா்கள் படம்பிடிப்பதற்கு பொலிசாா் அனுமதி மறுத்தனர். இந்த அரசிலும் ஊடக சுந்திரம் வழங்கப்படவில்லை. பொரளை மயாணத்தின் 4 நுழைவாயில்களிலும் 4 பொலிசாா் கேட்டை மூடி கடமையில் உள்ளனா். அவா்கள் ஊடகவியலாளா்களை உள்ளே விட வேண்டாம் என கட்டளை வந்துள்ளதாகச் சொல்கின்றனா். பிரதான பாதையில் நின்று தமது கமாராக்களினால் துாரப் படப் பிடிப்புக்கும் தெரியாத இடமாக தோன்றும் நிலையில் புகைப்படங்களை
எடுக்கும் காட்சியினை படங்களில் கானலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -