கோவை மாவட்டம், சுக்ரவார்பேட் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. இவருடைய 18 வயதான மகன் ஜெய்கணேஷ், மூளை வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகும் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், தொடர்ந்து மகனை பராமரிக்க முடியாததன் காரணமாக தன் மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி மணிமேகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து மணிமேகலை கூறியதாவது, எனது மகன் ஜெய்கணேஷ் 3 வயதில் மூளை காய்ச்சலில் பாதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகும் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஜெய்கணேஷ் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைக்கிறான். நள்ளிரவில் கூச்சல் போடுகிறான். இதனால் மற்ற வீடுகளில் உள்ள குழந்தைகள் பயப்படுகிறார்கள்.
இதனால் நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறோம். எனவே என்னுடைய மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.LS