அதாஉல்லா பற்றிப்பேச யாருக்கும் தகுதியில்லை. ஹசனலியின் மகனுக்கு அஸ்மி ஏ கபூரின் காட்டமான அறிக்கை...

ன்று தமது பதவிகள் கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலையில் தமது பதவிகளை தந்திரமாக அடைந்து கொள்ள மு.கா.ஒரு பிரிவால் தலைமைத்துவத்திற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட கிழக்கின் எழுச்சி செயற்பாட்டாளர்களின் ஒருவரால் அதாஉல்லாஹ் உரிமை தொடர்பான விடயத்தில் பெரும் தவறிழைத்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது

தமிழ் முஸ்லீம் உறவு என்றால் என்ன?
எமக்கு இழக்கப்பட்ட அநிதிகளையெல்லாம் மூடி மறைத்து எம்மை குழு வாக முன்னிருத்தி எம்மை நாமாக சென்று அடிமைக்காக்கி விட்டு உறவுடன் வாழ்வதா?
இல்லை வடக்கு கிழக்கை பிரித்து அதை முஸ்லீம் பெரு நிலப்பரப்பாக்கி எமது சுதந்திர கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் சிங்கள இனங்கள் நிம்மதியோடு வாழ்வதா?

அதாஉல்லாஹ் மு.கா விட்டு வெளியேறுகின்ற போது கட்சியின் தவிசாளர் பா.உ
அதாஉல்லாஹ்வின் அதிகாரங்களை ரவூப் ஹக்கீம் பறித்ததற்காக அதாஉல்லாஹ் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை
தேசிய பட்டியல் தரவில்லை என்று வெளியேறவில்லை

மாறாக சமாதான உடன்படிக்கை செய்த ரவூப் ஹக்கீம் எம்மை குழுவாக அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்
மாறாக இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படுகின்ற போது எம்மை குழுவாக அடையாளப்படுத்தி ஒடுக்குவதற்காக தயாரன வேளை அதாஉல்லாஹ் உள்ளிட்ட கிழக்கில் இருககின்ற பா.உ உறுப்பினர்கள் வெளியேறி சமுகத்தையும் கிழக்கு முஸ்லீம்களின் சுயத்தை உறுதிப்படுத்த முனைந்த போது ஒட்டு மொத்த கிழக்கு முஸ்லீம்களையும் காட்டிக் கொடுத்த மிகப் பெரிய நயவஞ்சகத்தனத்தை புரிந்தவர்கள் தான் இன்று தமது தேவைக்காக கிழக்கின் எழுச்சி என எதையோ கூற விளைகிறார்கள்

அதன் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அச்சுறுத்தளுக்கு மத்தியில் தனது உயிரை பணயம் வைத்து வரலாற்றில் எமக்கு கிடைத்த தீர்வான சுதந்திர கிழக்கை பெற்றுத் தந்த தலைவன் தான் அதாஉல்லாஹ்

இதை விட பெரிய தியாகத்தை இங்கு யாரும் செய்து விட வில்லை அதே போல கிழக்கு பிரிப்புதான் எம்மை நிம்மதி யாக வாழச் செய்தது

அதை விடுத்து சம்பந்தன் ஐயாவுடன் நெருக்கத்தை பேணி அவருடைய அறிக்கை களை பார்த்து நமது கருத்தை சொல்லும் தலைவர்கள் மத்தியில் முள்ளந்தண்டுள்ள தலைவனாக அதாஉல்லாஹ் வை பார்க்க முடியும்

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முன்னர் புலிகள் இருக்கின்ற போது முஸ்லீம் தேசியவாதிகள் இயக்கம் என்கின்ற அமைப்பை உருவாக்கி இணைந்த வடகிழக்கில் முஸ்லீம் சுயாட்சி என்றார்கள்
அந்த தேர்தலில் தான் அதாஉல்லாஹ் வடகிழக்கு பிரிய வேண்டும் உரக்க குரல் கொடுத்தார்
அதாஉல்லாஹ் கிழக்கை பிரித்து காட்டினார்
அனால் சுயாட்சி காரர்கள் தாங்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் பெறுகின்ற கொந்தராத்து அடிப்படையில் முஸ்லீம் சுயாட்சி கைவிடப்பட்டது

அது மீண்டும் இன்னொரு முறை தேர்தலுக்காக கிழக்கின் எழுச்சி என்றும்
முஸ்லீம் சுயநிர்ணயமும் என்றும் மாற்றம் பெற்றிருக்கிறது
அதாஉல்லாஹ் இந்த சமுத்திற்காக தனது உயிரை பணயம் வைத்து பெற்று தந்த சுதந்திர கிழக்கை பாதுகாக்கவே போராடுகிறோம்
வெறுமனே பிரதிநிதிதுவ அரசியலுக்காக அல்ல

வடகிழக்கு பிரிவதால் தமிழ் முஸ்லீம் உறவு இல்லமால் செய்வது என்பதை விட
இணைந்தால் முஸ்லீம்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டி வரும் என்பதை அணைவரும் நினைவில் கொள்ள வேண்டும்..

பதில் அனுப்பினால் பதிவிடலாம்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -